Wednesday, August 28, 2013

சுகாதாரக்கல்வி - தரம் - 09

சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்
வளிமாசடைதல்
மனித நடவடிக்கை மற்றும் இயற்கைச் செயற்பாடுகள் காரணமாக வளி பாவனைக்கு உதவாததாக மாற்றமடைதல் வளிமாசடைதல் எனப்படும்.

வளி மாசடையும் வழிகள்
1. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை மற்றும் நச்சுவாயுக்கள்
2. சில மின்சார உபகரணங்களிலிருந்து வெளிவரும் வாயுக்கள்
3. வாகானங்களிலிருந்து வெளிவிடப்படும் புகை
4. குப்பைகள் எரிவதனால் ஏற்படும் புகை
5. பிரிந்தழியும் சேதனக் கழிவுகளிலிருந்து வெளிவரும் வாயுக்கள்


6. ஜெட் விமானங்களிலிருந்து வெளிவிடப்படும் புகை

சுகாதாரக்கல்வி - தரம் - 09

சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்
சூழல் மாசடைதல்
மனிதநடவடிக்கைகள் காரணமாகவாழப் பொருத்தமில்லாத இடமாக சூழல் மாற்றமடைவதே சூழல் மாசடைதல் எனப்படும்.

மாசாக்கிகள்
வளி, நீர், நிலம், ஒலி என்பவற்றை மாசடையச் செய்பவை மாசாக்கிகள் என அழைக்கப்படும்.
சூழல் மாசடையும் போது சூழலில் காணப்படும் உயிரற்ற கூறுகளும் மாசடைகின்றன.
1. வளிமாசடைதல்
2. நீர்மாசடைதல்
3. நிலம்மாசடைதல்


4. ஒலிமாசடைதல்

சுகாதாரக்கல்வி - தரம் - 09

சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்

சூழலின் கூறுகள்
உயிருள்ள கூறு
இது மூன்றுவகைப்படும்.
1. உற்பத்தியாக்கிகள்
2. நுகரிகள்
3. பிரிகையாக்கிகள்

உற்பத்தியாக்கிகள்
தமக்குத் தேவையானஉணவைத் தாமேதயாரித்துக் கொள்ளக் கூடியவை உற்பத்தியாக்கிகள் எனப்படும்.
Eg:-பச்சைத்தாவரங்கள்

நுகரிகள்
தமக்குத் தேவையான உணவை உற்பத்தியாக்கிகளிடம் இருந்து பெறுபவை நுகரிகள் எனஅழைக்கப்படும்.
Eg:-விலங்குகள்

பிரிகையாக்கிகள்
உற்பத்தியாக்கிகளான தாவங்களினதும்,நுகரிகளான விலங்குகளினதும் இறந்த உடல்களை பிரிந்தழியச் செய்பவைபிரிகையாக்கிகள் என அழைக்கப்படும்.
Eg:-நுண்ணங்கிகள்

உயிரற்ற கூறு
1. வளி
2. நீர்
3. நிலம்
4. ஒலி

சுகாதாரக்கல்வி - தரம் - 09

சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்

சுகாதாரமேம்பாட்டிற்கானஅடிப்படைக் கொள்கை
1. சுகாதாரத்திற்குநன்மைபயக்கும் கொள்கை
2. இணக்கமான சூழலைஏற்படுத்தல்
3. சமூகத்தின் பங்களிப்பு
4. தனியாள் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்தல்
5. சுகாதாரசேவைகளைமீள் ஒழுங்கமைத்தல்
எம்மைச் சூழ காணப்படும் அனைத்தும் சூழலாகும்.(உயிருள்ள அங்கி களும்,உயிரற்ற சடப்பொருட்களும்)நாம் வாழும் இலங்கை நாடு ஏறக்குறைய 65,610சதுர கிலோமீற்றர்(Km2) பரப்பளவையுடைய இயற்கை வளங்கள் கொண்ட அழகியதீவாகும். இதன் காரணமாகவே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது விடுமுறைக் காலத்தைமனமகிழச்சியுடன் கழிக்க எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர்.
ஆனால் எமது பொறுப்பற்ற நடவடிக்கைகளால் இவ் வனப்புமிக்க சூழல் பாதிப்புள்ளாகி அழிவடைந்து கொண்டு செல்கின்றது.

சுகாதாரக்கல்வி - தரம் - 09

பாடஅலகுகள்

01. சூழலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்
02. சமனிலையாகச் சிந்தித்தும் செயற்பட்டும் மானிடத்தேவைகளைப் 
      பூர்த்திசெய்வோம்.
03. ஒத்திசைவான செயற்பாடுகள் மூலம் அன்றாடவேலைகளை 
      இலகுவாக நிறைவேற்றுவோம்.
04. சரியானகொண்நிலைகளைப் 
      பேணிஆரோக்கியமான வாழ்வைஅமைத்துக் கொள்வோம்.
05. ஓய்வைப் பயனுள்ளதாக்க விளையாட்டுக்களிலும் வெளிக்களச் 
      செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்.
06. மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஈடுபட்டுத் 
      திறன்களை வளர்த்துக்கொள்வோம்.
07. விளையாடுவோம்,சமூகத்திற்கு இசைவாகுவோம்.
08. நல்லூட்டத்திற்குஏற்புடையஉணவுப் பழக்கங்களைக் கைக்கொள்வோம்.
09. சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்குத் துலங்குவோம்.
10. உடற்றகைமையைப் பேணிச் சுகதேகியாவோம்.
11. ஆண்பாலாரினதும்,பெண்பாலாரினதும் கௌரவத்தைக் காப்போம்.
12. நீங்களும்,நாங்களும் ஒன்றே,நாம் எல்லோரும் இன்றே ஒன்றுபடுவோம்.
13. சமூகச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.